விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். வாயை விசில் மாதிரி வைத்து வாய் வழியாக (உதட்டை குவித்து) மூச்சை மெதுவாக இழுக்கவும். வாயை மூடி இரு மூக்கு துவாரம் வழியாக மூச்சை மெதுவாக வெளியிடவும். இது போல் பத்து முறைகள் பொறுமையாக பயிற்சி செய்யவும். வாய்வழியாக மூச்சை இழுக்கும் பொழுது அடிவயிறு லேசாக வெளிவர வேண்டும். மூக்கு வழியாக மூச்சை வெளியிடும் பொழுது அடிவயிறு லேசாக உள்ளே செல்ல வேண்டும். இந்த உணர்வுடன் பயிற்சி செய்யவும்.
பலன்கள்: உடலில் உள்ள அதிக உஷ்ணம் நீங்கும். வயிற்றுப்புண்கள், அல்சர், வாய் புண்கள், நாக்கு புண்கள் வராது. தலைவலி வராது. மூளை சூடு தணியும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். ரத்த அழுத்தம் வராமல் வாழலாம். நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
பொறுமையாக தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் ஆன்மாவுடன் இணைந்து ஆத்ம சக்தியை உணர்ந்து வாழ வழிவகை செய்கின்றது.
உணவில் ஒழுக்கம், உடலுக்குரிய ஓய்வு, எண்ணங்களை சரி செய்து விழிப்புடன் நல்ல எண்ணங்களை மட்டும் பின்பற்றி வாழ்தல், முத்திரை, தியானம், மூச்சு பயிற்சி செய்யுங்கள். தனிமனித ஒழுக்கத்தை வாழ்வில் கடைபிடியுங்கள், வாழ்க்கை இன்பமாகவே அமையும், துன்பமின்றி வாழலாம்.