அட்சய திருதியை நாள் ; எந்த நேரத்தில் நகைகள் வாங்கலாம்?
புத்தாண்டு பிறந்தவுடன் வரும் முக்கிய நல்ல நாட்களில் அட்சய திருதியையும் முக்கியமான ஒரு நாளாகும். இந்த நாளில்தான் கிருத யுகத்தில் பிரம்ம தேவன் உலகை உருவாக்கியதாக நம்பப்படுகின்றது.
இதனுடன், இந்த நாளில் திருமணம், கிரக பிரவேசம், ஷாப்பிங் போன்றவற்றிற்கும் ஒரு நல்ல நேரம் உள்ளது. இந்த ஆண்டு நாளை இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நாள் திருமணம், புது மனை புகுதல், புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது, புதிய கலைகளை கற்கத் துவங்குவது, பத்திரப்பதிவு ஆகியவற்ருக்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதாவது, இந்த நாளில் எந்த ஒரு சுப காரியத்தையும் நேரம் காலம் பார்க்காமல் செய்யலாம்.
அட்சய திருதியை அன்று 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளதால் இம்முறை மேலும் சிறப்பு பெற்றுள்ளது. அட்சய என்றால் அழியாதது. அட்சய திருதியை நாளில் செய்யும் செயல்கள் அழியாது அல்லது இந்த நாளில் செய்யும் செயல்கள் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை
எனவே, இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல், வழிபாடு செய்தல், தானம் செய்தல், ஷாப்பிங் செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் அதிகம். இந்த நாளில், விஷ்ணு மற்றும் லட்சுமியை வழிபடுகிறார்கள், இதனால் அவர்களின் அருள் எப்போதும் நிலைத்திருக்கும்.
இதனுடன், தங்கம் மற்றும் வெள்ளி, வீடு-கார் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கவும் உகந்த நாள் இது, இதனால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.