வாக்கிங் செல்பவரா நீங்கள்? உங்களுக்கான ஆலோசனைகள் !!

வாக்கிங் செய்பவர்களுக்கு பயிற்சியாளர் தரும் சில அறிவுரைகளைப் பார்ப்போம்.
Walking
Walking

* உடம்பினை லூசாக தொய்வாக வைத்து கொண்டு நடக்காதீர்கள்.

* தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். நேரான பார்வை இருக்க வேண்டும். உங்கள் தாடை நுனி பூமிக்கு இணையாக இருக்க வேண்டும். காதும் தோள் பட்டையும் சீராக இருக்க வேண்டும்.

* முதுகு நிமிர்ந்து இருக்க வேண்டும்.

* தோள்கள் உயர்த்தி இல்லாமல் சாதாரணமாகவும் முன் நோக்கி வளையாமல் சற்று பின் நோக்கியும் இருக்க வேண்டும்.

* கைகளை நிதானமாய் வீசி நடக்க வேண்டும்.

* நாய்களை பிடித்து நடைபயிற்சி செல்பவர்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நாயின் பின்னே இழுத்துக் கொண்டு போகக் கூடாது. உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.

* மேலும் சில நேர்மறை விளக்கங்களை உதாரணமாக முறையான ஷீ, பாதம் வைக்கும் முறை இவைகளை பயிற்சியாளரிடம் ஒரு முறையேனும் கேட்டு அறியவும். மேற்கூறப்பட்டவை நடைபயிற் சிக்காக மட்டுமல்ல. சாதாரணமாக நடக்கும் பொழுதும் சில குறைபாடுகள் பலருக்கு இருக்கின்றன. அதனையும் நேர்முகமாக கேட்டறிந்து சரி செய்துக் கொள்வது நல்லது.

இந்த நடைக்கும் நம் உடல் நலத்திற்கும் நீங்கள் நினைப்பதனைக் காட்டிலும் கூடுதல் தொடர்புகள் உள்ளன. முறையான உடல் அமைப்பினை கொண்டு நடக்கும் பொழுது சில பலன்கள் அமைகின்றன.

* உங்கள் எலும்புகள், மூட்டுகள் முறையான அமைப்பிலேயே இருக்கின்றன.

* முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, கால்வலி இருக்காது.

* தசைகளில் வலி, சோர்வு குறையும்.

* காயங்கள் ஏற்படாது.

* தடுமாறாமல் நடக்க முடியும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com