இந்திய பெண்கள் எலும்பு பிரச்சனையால் சமீபத்தில் அதிகளவில் பாதிக்கவும் தொடங்கியுள்ளனர். கடந்த சில வருடங்களாக எலும்பு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எலும்பு பிரச்சனையை தொடக்கத்திலேயே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் அமைப்பை கட்டமைப்பது, உறுப்புகளை பாதுகாப்பது, தசையினை வலுப்படுத்துதல், கால்சியத்தை சேமித்தல் போன்றவை எலும்புகளின் நலனுக்கும், உடல் நலனுக்கும் முக்கியமானது.
பெண்களுக்கு 30 வயதுக்கு பின்னர் எலும்பில் இருக்கும் கால்சியம் குறைய தொடங்குவதினால், அவர்கள் எலும்புகள் சார்ந்த பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.
ஈஸ்டிரோஜனின் செயல்பாடால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறும் நிலையில், இதே ஹார்மோன் பெண்களின் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இதே சமயத்தில், ஈஸ்டிரோஜனின் அளவு குறைவதால் மெனோபாஸ் நிலை எட்டத்தொடங்குகின்றனர்.
மேற்கத்திய பெண்களை காட்டிலும், இந்திய பெண்கள் முன்னதாகவே மெனோபாஸ் நிலையை அடைகின்றனர். இதனால் எலும்பின் வலிமை விரைந்து குறைகிறது.
எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளை இந்திய பெண்கள் குறைவாக சாப்பிட்டு வருகின்றனர்.
கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால், தயிர் போன்ற உணவுகளை பெண்கள் அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைப்போல இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். உணவுப்பழக்க வழக்கத்துடன் உடற்பயிற்சி, வைட்டமின் சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுதல், புகை, மது பழக்கத்தை தவிர்த்தல் போன்றவற்றை குறைக்கவும் வேண்டும்