பெண்களே சிறு தொழிலில் ஆர்வமா? : இதோ உங்களுக்கான ஆலோசனைகள் !!

பெண்களே சிறு தொழிலில் ஆர்வமா? : இதோ உங்களுக்கான ஆலோசனைகள் !!

தொழில்துறையில் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புபவர்கள் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது, சிறு முதலீட்டில் அதில் அதிக லாபம் கிடைக்குமா? என்பது போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழும். சிறு முதலீட்டில் எத்தகைய தொழில்களை தொடங்கலாம் என்பதை பார்ப்போம்

சணல் மற்றும் காகிதப் பை

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று நடைமுறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டனர். கலர் கலரான, சணல் மற்றும் காகிதப் பைகள். தற்போது மருந்துக் கடைகள், ஜவுளிக் கடைகள், ஜூவல்லர்ஸ் தொடங்கி காய்கனி கடை வரை இந்த வகைப் பைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. சணல் பை தயாரிப்பு மிக எளிதான தொழிலாகும். வெறும் 500 சதுர அடி பரப்பளவில் இந்த தொழிலை மேற்கொள்ளலாம். முதலீடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை போதும். ஆனால் காகிதப் பை தயாரிப்பு அதிக முதலீடு தேவைப்படும் தொழில். காகிதப் பை தயாரிப்பு இயந்திரத்தின் விலை ரூ.5 லட்சம் வரை ஆகும். ரூ.3 லட்சத்திலும் காகிதப் பை தயாரிப்பு மெஷின்கள் கிடைக்கின்றன..

சாக்லேட் தயாரிப்பு

வீட்டிலேயே சுமார் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் முதலீட்டில் சாக்லேட் தயாரிப்புத் தொழிலில் துணிந்து இறங்கலாம். இதையே நாம் பெரிய அளவில் செய்ய விரும்பினால் சாக்லேட்டுகளை துண்டு துண்டாக வெட்ட பயன்படும் இயந்திரம், சாக்லேட் கலவை மிஷின், உற்பத்தி செய்யும் கலன், பேக்கிங் என சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

நூடுல்ஸ் தயாரிப்பு தொழில்

அனைத்து கடைகளிலும் கிடைக்கும் நூடுல்ஸ் தயாரிப்பு மிக எளிமையானது. இதற்கு தேவையான மூலப் பொருட்களான கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ஸ்டார்ச் மாவு மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து, நூடுல்ஸ் தயாரிப்புக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் நிரப்பினால் நாம் விரும்பிய வடிவில், அளவில், நிறத்தில் நூடுல்ஸ் ரெடி. அதனை உலர வைத்து, பேக்கிங் செய்து விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம். மிகக் குறைந்த அளவிலான நூடுல்ஸ் தயாரிப்பு இயந்திரத்தின் விலை சுமார் ரூ.40 ஆயிரம். மிக தரமான அதிகளவில் நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்ய விரும்புபவர்கள் ரூ.1.5 லட்சத்தில் உள்ள அதிக திறனுடைய இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com