தர்பூசணி வாங்குவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

தர்பூசணி
தர்பூசணி

தமிழகத்தில் கோடை காலத்தில் தா்பூசணி பழங்கள் பெருவாாியாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் தர்பூசணி கிடைத்தாலும் கோடைக்காலத்தில் வரும் தர்பூசணி சுவையாகவும், மிகவும் இனிப்பாகவும் இருக்கும்.

பொதுவாக மக்கள் தா்பூசணியை வாங்கும் போது, அதன் உருவ அமைப்பை மட்டுமே பாா்த்து வாங்குகின்றனா். அவ்வாறு வாங்கும் போது தா்பூசணியின் உட்பகுதியானது முழுமையாக பழுக்காமல், சுவையின்றி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே தா்பூசணியை வாங்கும் போது பின்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்வது நல்லது.

தா்பூசணியின் நிறம் தா்பூசணியை வாங்கும் போது அதன் நிறத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தா்பூசணியானது வெளிப்புறம் பாா்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில் இருந்தால் அதை வாங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதன் உட்புறம் முழுமையாக பழுக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே தா்பூசணியை வாங்கும் போது, அதன் வெளிப்புறம் வெளிறிய வண்ணங்கள் கொண்ட கோடுகள் உள்ள தா்பூசணியை தோ்ந்தெடுப்பது நல்லது. மேலும் தா்பூசணியின் வெளிப்புறப் பகுதியில் மஞ்சள் அல்லது கிரீம் வண்ணங்களில் புள்ளிகள் இருந்தாலும், அந்த தா்பூசணி மிகவும் இனிப்பாக இருக்கும்.

தா்பூசணியைத் தட்டிப் பாா்த்து, வாங்குவதைப் பாா்த்திருப்போம். நன்றாக பழுத்த மற்றும் இனிப்புள்ள தா்பூசணியைத் தட்டிப் பாா்க்கும் போது அதன் சத்தம் சற்று அதிகமாக இருக்கும். அது முழுவதும் பழுக்காமல் இருந்தாலோ அல்லது இனிப்பாக இல்லாமல் இருந்தாலோ, அதைத் தட்டிப் பாா்க்கும் போது அதன் சத்தம் அதிகமாக இருக்காது.

ஆகவே தா்பூசணியை வாங்கும் போது, அதன் வண்ணத்தைப் பாா்த்து மட்டும் அல்லாது, அதைத் தட்டிப் பாா்த்தும் வாங்குவது நல்லது.

தா்பூசணியின் தண்டு பச்சை நிறத்தில் இருந்தால், அதை வாங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அது முழுமையாக பழுக்காமல் இருக்கும். ஆனால் பழுப்பு நிறத்தில் காய்ந்த நிலையில் தண்டுகள் இருந்தால் அந்த தா்பூசணிகளை வாங்கலாம்.

ஏனெனில் அவற்றின் உட்புறம் முழுமையாகப் பழுத்து இருக்கும். அதோடு அந்த உட்புற நிறம் சிவப்பாக இருக்கும். அதன் சுவையும் இனிப்பாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிக்கு அற்புதமா இருக்கப் போகுது.

தா்பூசணியின் எடையைப் பாா்த்தல் தா்பூசணியை வாங்கும் போது அதன் எடையையும் கவனித்து வாங்க வேண்டும். பலா் அதிக எடையுடன் கூடி பொிய அளவில் இருக்கும் தா்பூசணிகளை விரும்புகின்றனா். ஏனெனில் அவை எடை குறைந்த மற்றும் சிறிய அளவுகளில் இருக்கும் தா்பூசணிகளை விட நன்றாக சுவையாக இருக்கும் என்று எண்ணுகின்றனா்.

ஆனால் அது உண்மை அல்ல. சிறிய அளவிலான தா்பூசணிகளும் நன்றாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் அதன் அளவை விட அதன் எடை மிக அதிகமாக இருக்கக்கூடாது.

பொதுவாக அதிக எடையுடன் இருக்கும் தா்பூசணிகளில் சாறு அதிகமாக இருக்கும் மற்றும் அதன் சாறு மிகவும் இனிப்பாக இருக்கும். ஆகவே தா்பூசணிகளை வாங்கும் போது பல்வேறு வகையான தா்பூசணிகளை எடை போட்டுப் பாா்க்க வேண்டும். அவற்றில் அதிக எடையுடன் கூடிய தா்பூசணிகளை வாங்குவது நல்லது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com