கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்பவாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் வறட்டு கவுரவம், நியாயமற்ற கோபம் , தரமற்ற வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தவே செய்யும். இதனால் பல குடும்பங்களில் ஒற்றுமை குறைவு மிகுதியாகவே இருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் பொருளாதார தேவை காரணமாக கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ஒருவரையொருவர் பார்த்து பேச நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டது.
அத்துடன் பணத் தேவைக்காக கணவன் ஒரிடத்திலும், மனைவி ஒரு இடத்திலும் குழந்தைகள் வேறு இடத்திலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் பந்தம், பாசம், விட்டுக் கொடுத்தல், அன்பாக பழகுதல் போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு. அப்படியான உறவுகள் மீண்டும் சேர இந்த சிறு பரிகாரத்தை செய்து வாருங்கள். கை மேல் பலன் கிடைக்கும்.
தினமும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு எந்த உறவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த உறவின் பெயரை 21 முறைச் சொல்லவும். அவர்கள் மீண்டும் பழையபடி சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.