தங்கம் வாங்க நினைக்கிறவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி...!

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில், தற்போது முதலீட்டாளர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் அதிக சந்தோஷம் கொடுக்கும் வகையில் இன்று சற்று குறைந்துள்ளது.
தங்கம் வாங்க நினைக்கிறவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி...!

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில், தற்போது முதலீட்டாளர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் அதிக சந்தோஷம் கொடுக்கும் வகையில் இன்று சற்று குறைந்துள்ளது.


இருப்பினும் சர்வதேச சந்தையிலும், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா பதற்றமானது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதற்கு மத்தியில் தங்கம் விலையானது குறைந்துள்ளது தங்கம் வாங்க மிகச்சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.50 டாலர்கள் அதிகரித்து, 1925.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை பார்கிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.

எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் குறைந்து பின்னர் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. இருப்பினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறையும் போது வாங்கி வைத்து கொள்ளலாமே....

சர்வதேச சந்தையில் வெள்ளி தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.39% அதிகரித்து, 25.288 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு ரூ.166 அதிகரித்து, ரூ.51,460 வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. இருப்பினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு ரூ.266 அதிகரித்து, ரூ.67,229 வர்த்தகமாகி வருகின்றது. இருப்பினும் வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்னும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கொண்டுள்ளது.. குறிப்பாக, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,847 , இதே சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,776 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு ரூ.39 குறைந்து, ரூ.5,285 , இதே சவரனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.42,280 , 10 கிராமுக்கு ரூ.52,850 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

என்ன இப்போவே தங்கம் வாங்க புறப்பட்டாச்சா...!

Gold, rate, price,
Gold, rate, price,

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com