அஜித் தோவலின் இல்லத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

அஜித் தோவலின் இல்லத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் இல்லத்துக்கு இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சென்றுள்ளார். அங்கி அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய படையினருக்கும் சீனா ராணுவத்திற்கும் லடாக் எல்லைப்பகுதியில் மோதல் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இன்று டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திப்பதற்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்திக்கவுள்ளார்

முன்னதாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்களை இந்தியா உடனடியாக நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் லடாக் எல்லைப்பகுதியில் பிரச்சனை குறித்து பேசப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com