இன்று 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் இன்று 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி

இன்று 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி தகுதியுள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கார்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மாணவி ஒருவர், இதனால் உடல் உபாதை எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், 12 முதல் 14 வயதிலான சிறார்களும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று சிறார்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பெங்களூருவில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சுகாதார அமைச்சர் நாகேஷ் பார்வையிட்டார். அசாமில், 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கவுகாத்தியில் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com