நெடுஞ்சாலை பணிகளை விரைந்துசெயல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை பணிகளை விரைந்துசெயல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

செங்கல்பட்டு-திண்டிவம் சாலையை 8 வழி சாலையாக அகலப்படுத்தல், சென்னை-தடா சாலையில் மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்ட சாலை வரை ஆறு வழித்தட உயர்மட்ட சாலை அமைத்தல், திருச்சி முதல் துவாக்குடி வரையிலான உயர்மட்ட சாலை, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர்மட்ட சாலை, கோயம்புத்தூர் - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com