10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கியது பொதுத்தேர்வு

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கியது பொதுத்தேர்வு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை பொது தேர்வு நடத்தபட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com