எல்லை தாண்டிய ஊடுருவல்கள் பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்திய எல்லைகளில் கண்காணிப்பு தீவுரப்படுத்தப்பட்ட நிலையில் எல்லை தாண்டிய ஊடுருவல்கள் பெருமளவு குறைந்து உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய ஊடுருவல்கள் பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் உறுப்பினர் ஒருவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய ஊடுருவல் அதிகரித்து உள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்திய எல்லைகளில் ஊடுருவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட வேலிகள் அமைப்பு, உளவுத்துறை அமைப்புகளின் செயல்பாடுகளை அதிகரித்தல், அதிநவீன ஆயுதங்களுடன் ராணுவ வீரர்களை பணியில் நிறுவுதல் மற்றும் ஊடுருவலை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2017ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவல் என்பது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி 2017ம் ஆண்டு 136 ஊடுருவல்கள் நிகழ்ந்த நிலையில் 2018ம் ஆண்டு 143 ஆகவும், 2019ம் ஆண்டு 138 ஆகவும், 2020ம் ஆண்டு 51 ஆகவும் குறைந்துள்ளது. இதேபோல் 2021ம் ஆண்டில் 34 ஊடுருவல்கள் மட்டுமே நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com