தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தேர்தல் செல்லாது...

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலை பதிவு அலுவலர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தேர்தல் செல்லாது என ஒருமனதாக ஏற்று உறுப்பினர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தேர்தல் செல்லாது...

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் உறுப்பினர் குழு கூட்டம் சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ரேணுகா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை ஹாக்கி சங்க தலைவரும், ஒலிம்பியனுமான ஹாக்கி பாஸ்கரன் உள்ளிட்ட 26 மாவட்ட ஹாக்கி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஹாக்கி சங்கத்தின் செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டதுடன் 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஹாக்கி சங்க நிர்வாகிகள் தேர்தல் விதிமுறையை மீறி நடத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாடு கூட்டுறவு பதிவு அலுவலர் தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்ல. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு பதிவு அலுவலர் கூறியதை ஏற்று ஒருமனதாக தேர்தலை செல்லாது என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

மீண்டும் தேர்தல் நடத்தும் வரை தற்போதைய செயலாளர் ரேணுகா தேவியே தொடருவார் என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அரசு ஒதுக்கிய 10 லட்சம் ரூபாய் நிதியை கையாடல் செய்த தலைவர் சேகர் மனோகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறி அவருக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com