8 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க கோரிய மேல்முறையீடு மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமிழ்நாடு அரசு உள்ளிட்ட 8 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
8 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

நாட்டின் சீதோசன நிலையை சமநிலைப்படுத்துவதில் மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பங்கு அதிகம் உள்ளது. குஜராத் முதல் தமிழகம் வரை அமைந்துள்ள நீண்ட நெடிய மலைகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு வங்க முதல் வட தமிழகம் வரை அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்களை பாதுகாக்கவும் அவற்றின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கவும் இந்த மலைத் தொடர்களில் உருவாகும் ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், மரங்கள் வெட்டப்படுவது, வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க ஒரு நிரந்தர வாரியம் அமைக்க கோரி (திமுக) வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் நீதிபதி விக்ரம் நாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் குஜராத்,மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, தமிழகம், கேரளா,ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய 8 மாநிலங்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com