சாலை விபத்துகள்: இந்தியாவின் நிலை என்ன?

உலக அளவில் ஒப்பிடும் போது சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையின் இந்தியாவின் நிலை என்ன? என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதில் அளித்துள்ளது.
சாலை விபத்துகள்: இந்தியாவின் நிலை என்ன?

நடைபெற்று வரும் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் உறுப்பினர் ஒருவர் உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதா? அப்படியானால் உலக நாடுகளின் எண்ணிக்கையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஜெனிவாவில் உள்ள 'சர்வதேச சாலை கூட்டமைப்பு' வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி விபத்துக்கள் அதிகம் நடக்கும் எண்ணிக்கையின் படி உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இதைப்போல் சாலை விபத்துக்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா முதல் இடத்திலும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையின் படி 3வது இடத்திலும் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 69.80% பேர் 18-45 வயதுடையோர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com