இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை 5 % வரை மட்டுமே உயர்வு

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை 5 % வரை மட்டுமே உயர்வு

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உலக நாடுகள் பெட்ரோல் டீசல் விலையை 50 முதல் 58 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் இந்தியா 5 சதவீதம் மட்டுமே உயர்த்தியதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு வழக்கமான இருக்கை அமைப்புடன் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் எதிர்கட்சி எம்.பிக்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி 8.5ல் இருந்து 8.1 சதவீதமாக குறைப்பு, உக்ரைனில் இருந்து மத்திய அரசால் மீட்டு அழைத்து வரப்பட்ட இந்திய மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உலக நாடுகள் பெட்ரோல் டீசல் விலையை 50 முதல் 58 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் இந்தியா 5 சதவீதம் மட்டுமே உயர்த்தியதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய அவர், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், இலங்கை மற்றும் இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலை குறித்த ஒப்பீட்டு தரவுகள் தன்னிடம் உள்ளதாகவும், மேற்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் 50 முதல் 58 சதவீதம் வரை விலையை உயர்த்தியதாகவும் ஆனால் இந்தியா 5 சதவீதம் வரை மட்டுமே விலையை உயர்த்தியதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களின் சுமையை குறைக்க முன் வந்த மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான மத்திய வரியை குறைத்ததாகவும் ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் 9 மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய முன்வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com