மத்திய அரசின் கால வரம்பின் படி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் மத்திய அரசின் கால வரம்பின் படி முறையாக நடத்தப்படுகிறது என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கால வரம்பின் படி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடத்துவது தொடர்ச்சியாக குறைந்து வருகிறது என்பது உண்மையா? அப்படியானால் அதன் விவரங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக பதிலளித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி முரளிதரன், 2017ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தலா 61 அமர்வுகளாக செயல்பட்டு உள்ளது. 2018ம் ஆண்டில் மக்களவை 63 அமர்வும், மாநிலங்களவை 65 அமர்வுகளாகவும் செயல்பட்டு உள்ளது. 2019ம் ஆண்டில் மக்களவை மக்களவை 67 அமர்வு, மாநிலங்களவை 65 அமர்வு, 2020ம் ஆண்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலா 33 அமர்வுகளாக நடந்துள்ளது.

2020ம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமர்வுகள் குறைந்ததற்கான காரணம் கொரோனா பாதிப்பு காரணமாக கூட்டத்தொடர் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2021ம் ஆண்டில் மக்களவை 59 அமர்வுகளும், மாநிலங்களவை 58 அமர்வுகளும் நடந்துள்ளது. 2021ம் ஆண்டிலும் கொரோனா காரணமாக சில கூட்டங்கள் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.

மேலும் மாநில சட்டமன்ற கூட்டத் தொடர்களில் அமர்வுகள் குறைந்துள்ளதா என்பது தொடர்பான கேள்விக்கு "கூட்டாட்சி அமைப்பு தொடர்பான அரசியலமைப்பு விதிகளின் பார்வையின் கீழ் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது" என மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com