
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவினை உயர்த்தி வழங்கும் வகையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாவது கட்ட பணிகளை செயல்படுத்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதமும், ஊரக பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதமும் வீட்டு இணைப்புகளுடன் குடிநீர் வழங்கும் பொருட்டு, காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டு இரண்டாவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் மாநகராட்சி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6802 ஊரக குடியிருப்பு கலை சார்ந்த 41.55 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.