இதுகுறித்த விரிவான தகவல்கள் என் சி பி ஐ ஏடிஎம் நெட்வொர்க்குகள் மற்றும் வங்கிகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,
அனைத்து வங்கிகள் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து ஆப்ரேட்டர்களிலும் ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஊக்குவிப்பதற்காக இந்த முறை செயல்படுத்தப்பட இருக்கிறது, இதன்மூலம் கார்டுகளில்லாமல் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் முறையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இனிமேல் ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஏடிஎம் மையங்களில் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை சில வங்கிகள் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த வசதியை அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.