நிதி பற்றாக்குறையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

நடப்பாண்டில் நிதி பற்றாக்குறையை படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதி பற்றாக்குறையை  குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தனபால், நிதிநிலை அறிக்கையில் புதிதாக வருவாயை உயர்த்த திட்டம் ஏதும் இல்லை, செலவினத்தை குறைக்கவும் திட்டங்கள் ஏதுமில்லை என்றும், சீர்திருத்தம் செய்ததாக தெரியவில்லை என கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் போது நிதிபற்றாக்குறை 92 ஆயிரம் கோடி வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது நிதிநிலை அறிக்கை 82 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளதாகவும், சரியான நிதி திட்டமிடுதலால் கடந்த காலத்தைவிட சுமார் 10ஆயிரம் கோடி குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் சபாநாயகர் தனபால், நிதிநிலை அறிக்கையை படித்தால் அவருக்கு தெரியும் என கூறிய அவர், நடப்பாண்டில் நிதி பற்றாக்குறையை மேலும் படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு, ஏழு நிதிநிலை அறிக்கைகளில் இதுபோன்று நிதிப்பற்றாக்குறை அளவு குறைந்ததில்லை என்றும், ஒரே வருடத்திற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையை குறைத்துள்ளோம் எனவும் அவர் பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா இரண்டாம் அலையின் போது பல கட்டுப்பாடுகள் இருந்ததாகவும், பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதால், அதன் மூலம் வருவாய் வந்தது எனவும் தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com