ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து இந்தியா புறக்கணித்துள்ளது.
ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீது நேற்று

வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஆதரிக்குமாறு ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருந்தது. உக்ரைனின் வளர்ந்து வரும் மனிதாபிமான தேவைகளை தீர்மானத்தில் ஒப்புக்கொண்ட ரஷ்யா, அதில் உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பை பற்றி குறிப்பிடாமல் மறைத்து உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மொத்த உள்ள 15 உறுப்பு நாடுகளில் ரஷ்யாவுக்கு 9 நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஆனால் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 உறுப்பு நாடுகள் வாக்களிக்காமல் வெளியேறிய நிலையில் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் புறக்கணித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே இந்தியா நல்லுறவை நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com