3 ஆண்டில் 8 மாநிலங்களில் 45 யானைகள் ரயிலில் அடிபட்டு பலி

2018-2021ம் ஆண்டில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 45 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து உள்ளதாக மத்திய வனத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டில் 8 மாநிலங்களில் 45 யானைகள் ரயிலில் அடிபட்டு பலி
Admin

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா? யானை வழித்தடங்களில் உள்ள ரயில் பாதைகளில் ரயில்களை மிக எச்சரிக்கையுடன் இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் ஏதேனும் வழிமுறைகள் வழங்கி உள்ளதா? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய வனம்,சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைமாற்ற துறையின் இணை அமைச்சர் பூபிந்தர் யாதவ், ரயில் வழித்தடத்தில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க ரயில்வே அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகம் இடையே நிரந்தர குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், யானை வழித்தடங்களில் உள்ள ரயில்களில் கவனமுடன் இயக்க ரயில் நிலைய மேலாளர் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே அமைச்சகத்தால் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, ஜார்கண்ட், கேரளா, ஒடிஷா, உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2018-2019ம் ஆண்டில் 19 யானைகளும், 2019-2020ல் 14 யானைகளும், 2020-2021ம் ஆண்டில் 12 யானைகளும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து உள்ளது. இதேபோல், தமிழகத்தை பொறுத்தவரை, 2018-2019ம் ஆண்டு மற்றும் 2019-2020ம் ஆண்டில் ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை. 2020-2021ம் ஆண்டில் 1 யானை தமிழகத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து உள்ளது என எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com