உத்தரகாண்டில் காங்கிரஸ் படுதோல்விக்கு பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
உத்தரகாண்டில் இம்முறை நிச்சயம் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் உத்தரகாண்டில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பிரச்சாரக் குழுத் தலைவர் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சி-யின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் தோல்விக்கான மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே ராம்நகர் தொகுதியில் போட்டியிட விருப்ப தெரிவித்ததாகவும் ஆனால் மேலிடம் தன்னை லால்குவா தொகுதியில் போட்டியிட வைத்ததாகவும் ஹரிஷ் ராவத் தனது தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.