மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதி குறைக்கப்படவில்லை

2022-23ம் ஆண்டுக்கான மொத்த மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதி குறைக்கப்படவில்லை என மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதி குறைக்கப்படவில்லை

2021-2022ம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட் 3.78% ஆக இருந்த நிலையில் 2022-2023ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கான பட்ஜெட் 3.36% ஆக குறைந்துள்ளதா? மேலும், பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12.5 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்க 75,000 கோடி தேவை ஆனால் 68,000 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளதா? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், 2013-2014ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 0.5% ஆக இருந்த நிலையில் 2021-2022 மற்றும் 2022-2023ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு 1.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 2021-2022ம் ஆண்டில் 65,000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 68,000 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய வேளாண் அமைச்சகம் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com