பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவரான பால்கனகராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்கனகராஜ், பொதுமக்களுக்கு எதிரான அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது போல் போலியான தனியார் தொலைக்காட்சி டிஜிட்டல் கார்டை சில விஷமிகள் உருவாக்கி பரப்பி இருப்பதாகவும், இது வேண்டுமென்றே பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பெயரை கெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போலியான தகவலை உருவாக்கியது யார்? அவர்களின் நோக்கம் என்ன? யாருடைய பின்புலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், பொங்கல் தொகுப்பு குறித்து போலியான டிஜிட்டல் கார்டை பரப்பியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி செல்வகுமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்காமல் பொய்யாக வழக்குபதிவு செய்துள்ளதாகவும், உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளதாக அவர் கூறினார். நிர்மல் குமார் போலியான டிவிட்டை பரப்பி அதன் உண்மைதன்மை அறிய பரப்பியதாகவும், அதில் தவறில்லை என அவர் கூறினார்.