விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும்- முதல்வர் உறுதி

விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும்- முதல்வர் உறுதி

நீட் தேர்வு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தை இரண்டாவது முறையாக மீண்டும் அந்த கோப்புகளை திருப்பி டிவி அனுப்பிவைக்க முடியாது குடியரசு தலைவருக்குதான் அனுப்பி வைக்க வேண்டும் என ஆளுநர் குறிபிட்டதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் அமைச்சர்,கே. என் நேரு இல்லத் திருமண விழா முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திருமணத்தை நடத்தி வைத்த பிறகு உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திருச்சி என்றால் நேரு தான், மாநாடு என்றாலும் நேரு தான் என்ற அவர், திமுக - விற்காக உழைத்த குடும்பம் நிறைய உண்டு அதில் முதல் குடும்பம் நேருவின் குடும்பம் என்றார்.

நேற்று நமக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்து இருக்கிறது, நீட் தேர்வு விலக்கு தீர்மாணம் ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் நேற்று ஆளுநரை சந்தித்து அந்த கோப்புகள் குறித்து தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, சட்டம் உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் அதனால், இரண்டாவது முறையாக மீண்டும் அந்த கோப்புகளை திருப்பி அனுப்பிவைக்க முடியாது குடியரசு தலைவருக்குதான் அனுப்பி வைக்க வேண்டும் என ஆளுநர் குறிபிட்டதாகவும், விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் பேசிய முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்தியாவில் இருக்கும் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல் நிறைந்த தலைவராகவும், காங்ரஸ் கட்சிக்கு சோதனை காலத்தில் தோளோடு தோல்கொடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற அவர், ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று பேசிய ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என்றார்.

இந்நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் சேகர் பாபு, பொன்முடி, அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி குட்லக், நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர் பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மநகராட்சி மேயர், துணை மேயர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com