கலால் துறைக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.1063 கோடி வருவாய்....

புதுச்சேரியில் முதல் முறையாக கலால் துறைக்கு 2021-22 நிதியாண்டில் ஆயிரத்து 63 கோடி வருவாய் கிடைத்துள்ளது என கலால் துறை துணை ஆனையர் தகவல் தெரிவித்துள்ளார்.
கலால் துறைக்கு 2021-22 நிதியாண்டில்  ரூ.1063 கோடி வருவாய்....

இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் நிதியாண்டில் முதல்முறையாக ரூ. 1063 கோடி வருவாய் கலால்துறை மூலம் அரசுக்கு கிடைத்துள்ளது, இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்கள் விஸ்கி பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் மூலம் ரூ. 778 கோடியும், பீர் மூலம் ரூ. 151 கோடியும், சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடை கிஸ்தி மூலம் ரூ. 63 கோடியும், புதுப்பித்தல் மற்றும் பிராண்ட் லேபில் பதிவு மூலம் ரூ. 60.5 கோடி ஆகியவற்றின் மூலம் கிடைத்துள்ளது. குறிப்பாக 20 சதவீதம் சிறப்பு கலால் வரி மற்றும் ஆன்லைன் மூலம் கண்காணித்தல் மற்றும் வரி வசூலித்தல் தொடர் ஆய்வு மற்றும் சட்டவிரோத விற்பனை தடுத்தல் அவற்றின் மூலம் இந்த இலக்கை அடைய முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com