இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி கருத்துக்களை பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NIRF தரவரிசைக்கு விண்ணப்பித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்து மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
வரும் 27-ம் தேதிக்குள் www.nirfindia.org இணையதளத்தில் கருத்துகளை முன்வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னரே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.