2017-2021 வரை இந்தியாவில் 71 லட்சம் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

2017-2021 வரை இந்தியாவில் 71 லட்சம் மாணவர்கள் இளங்கலை மருத்துவ கல்வியில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்
2017-2021 வரை இந்தியாவில் 71 லட்சம் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பாகவும் நாட்டிலுள்ள மொத்த மருத்துவ குணங்கள் தொடர்பாகவும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார் இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர (நீட்) தேர்வுக்கு சேர விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11,38,890 ஆகும். இதேபோல், 2018ம் ஆண்டில் 13,26,725 மாணவர்களும், 2019ம் ஆண்டில் 15,19,375 மாணவர்களும் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 2020ம் ஆண்டில் 15,97435 மாணவர்களும், 2021ம் ஆண்டில் 16,14,777 மாணவர்களும் பதிவுசெய்துள்ளனர். மொத்தமாக கடந்த 2017-2021 கல்வி ஆண்டில் மருத்துவ இளங்கலை தேர்வில் சேர 71,97,202 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com