
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அல்லாதவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாங்கிய சொத்துக்களின் எண்ணிக்கை மற்றும் சொத்துக்கள் வாங்கப்பட்ட இடங்கள் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு, ரியாசி, உதம்பூர் மற்றும் கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அல்லாத 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.