ரோப்கார் விபத்தில் 2 பெண்கள் பலி,18 பேர் படுகாயம்

ரோப்கார் விபத்தில் 2 பெண்கள் பலி,18 பேர் படுகாயம்

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோவிலுக்கு அருகில் உள்ள திரிகுட் மலையில் கேபிள் கார்களில் இரண்டு கேபின் நேற்று மோதியது; இதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இந்நிலையில், 15 கேபின்கள் அங்கங்கே நின்றது. இதனை அடுத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; அதன்பேரில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட ராணுவவீரர்கள் உயரமான இடங்களுக்குச் சென்று மக்களை மீட்பதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நேற்று இரவு நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை என்ற காரணத்தினால் மீட்பு பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் 32 மணி நேரங்களுக்கு மேலாக ரோப் கார் கேபின்களில் சிக்கியிருந்த மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனை ஏற்று MI17 ரக ஹெலிகாப்டர்கள் மூலமாக ரோப் கார் கேபின்களில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்போது வரை 18 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 48 பேர் சிக்கி இருப்பதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பான முறையில் ரோப் கார்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com