அடேங்கப்பா... உலகின் 210 நாடுகளில் வசிக்கும் 1.34 கோடி இந்தியர்கள்

உலகின் 210 நாடுகளில் 1.34 கோடி இந்தியர்கள் வசித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அடேங்கப்பா... உலகின் 210 நாடுகளில் வசிக்கும் 1.34 கோடி இந்தியர்கள்

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

அமெரிக்கா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, பாகிஸ்தான் என உலகம் முழுவதும் உள்ள 210 நாடுகளில் சுமார் 1,34,51,654 இந்தியர்கள் வாழுகின்றனர்.

உலகில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளின் போது இந்தியர்களை வெளியேற்றுவதற்காக அந்நாடுகளுடன் இந்தியா இணக்கமாக செயல்படுவதாகவும் இந்தியர்களின் உதவி மற்றும் பாதுகாப்பு தேவைக்காக பல்வேறு உதவி எண்கள் மற்றும் உதவி மையங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 34,19,875 இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 25,92,166 இந்தியர்களும்,

அமெரிக்காவில் 12,80,000 இந்தியர்கள், குவைத் 10,28,274 இந்தியர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் ரஷ்யா போர் நடத்திவரும் உக்ரைனில் 22,500 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதை தவிர மற்ற விவரங்கள் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தால் வழங்கப்படவில்லை. மேலும் பொருளாதார நெருக்கடியால் கடுமையான இன்னல்களை சந்தித்து வரும் இலங்கையில் 14,000 இந்தியர்கள் வாழ்வதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com