யானைகள் தாக்கியதில் கடந்த 2 ஆண்டுகளில் 1061 பேர் பலி

யானைகள் தாக்கியதில் கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்து 61 பேர் உயிரிழப்பு என மத்திய வனத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
யானைகள் தாக்கியதில் கடந்த 2 ஆண்டுகளில் 1061 பேர் பலி

வன விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது மத்திய அரசு கவனத்தில் எடுத்து உள்ளதா? மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, 2020ம் ஆண்டு இந்தியாவில் பீகார், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புலிகள் தாக்கி 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2021ம் ஆண்டில் 14 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை 2020ம் ஆண்டில் புலி தாக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021ம் ஆண்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை எனவும் எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிஷா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2019-2020ம் ஆண்டில் 594 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் 2020-2021ம் ஆண்டில் 467 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2019-2020ம் ஆண்டில் 58 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்த உள்ளதாகவும் 2020-21ம் ஆண்டில் 57 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்த உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com