சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது

சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதில் உரையை வழங்கிய நிதி அமைச்சர், வருவாய் துறையில் வருவாயை பெருக்கவும் சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், இதற்கு இரண்டு ஐஆர்எஸ் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறி அவர், தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர் குழு சேவை மனப்பான்மையுடன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் செயலாற்றி வருவதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, அரசின் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய அறிவுரைகள் வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் இதுவரை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கப் பெறாததால் அரசாணை வெளியிட முடியாத நிலை‌ உள்ளதாகவும், இது எந்த வகையிலான ஜனநாயகம் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், வணிக வாகனங்களுக்கான வரி சீர்திருத்ததை செயல்படுத்தவேண்டும் என்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com