முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் கிடையாது..

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய மாற்றுப்பணி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் கிடையாது..

சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் சித்த மருத்துவ மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அதன் புதிய கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களுக்கு அரசின் சார்பில் உரிய மாற்று பணி விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார் மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் உரிய முன் அனுமதியைப் பெற்று போராடி இருந்தால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும் அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களைப் பொறுத்த மட்டில் ஏற்கனவே அவர்கள் தற்காலிக அடிப்படையில் தான் கடந்த ஆட்சியில் பணியமர்த்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட இந்த மருத்துவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் அரசின் சார்பில் பணி வாய்ப்புகளில் வருங்காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அடுத்த ஒரு அலை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை, பொதுமக்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு முக கவசம் அணிய வேண்டும், முக கவசம் அணிவதால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என தெரிவித்தார்.

முகக் கவசம் அணியாதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு இனிவரும் காலங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com