சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் இருந்து இந்த செயலியின் மூலம் அந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளின் தட எண்கள் வரிச்சைப்படி தெரிந்து கொள்ளமுடியும் மேலும் எவ்வளவு நேரத்தில் பேருந்து வரும் எந்த எந்த வழித்தடத்தில் பேருந்துகள் கிடைக்கும் போன்ற விவரங்களை இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தற்போதைக்கு ஆன்ராய்ட் போன்களில் பதிவிரக்கம் செய்யும் செயலியை சென்னை தலைமைச்செயலகத்திம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு துவங்கிவைத்தார். இதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 3454 பேருந்துகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
602 வழித்தடங்களில் 6,026 பேருந்து நிருந்தக்ளில் நின்று செல்லும் மாநகர பேக்குவரத்து கழகங்களின் பேருந்துகளின் இயக்கத்தை பயணிகள் அறிந்துகொள்ள முடியும் என 'சென்னை பஸ்' செயலியை துவங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.