தேசிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டாகலாம்..

தேசிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் 1 வருடம் ஆகலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டாகலாம்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற கன்வில்கர் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கொண்டு வந்து செயல்படுத்த ஒரு வருடம் வரை ஆகலாம் எனவும் தற்காலிகமான அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு மாத காலம் ஆகும். எனவே தற்பொழுது உள்ள கண்காணிப்பு குழு தொடர்ந்து செயல்படலாம் என்பதை அறிவுறுத்தல் கொடுப்பதாக கூறினார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் அப்படி என்றால் மேற்பார்வை குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கூறினர். கண்காணிப்பு குழுவில் தொழில்நுட்ப வள்ளுவரும் இடம்பெறும் வகையில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் தலா 1 நபரை கூடுதலாக பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு யோசனை முன்வைத்தது. இதனையடுத்து வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பட்டது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com