அதிகரிக்கும் கொரோனா பரவல்... வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க காவல்துறை அறிவுறுத்தல்!!

கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டிற்கு வருபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பரவல்... வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க காவல்துறை அறிவுறுத்தல்!!

இரண்டு வாரங்களாக மீன்களின் விலை சற்று அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரம் மீன்கள் விலை அதிகரிக்காமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே சிந்தாதரிப்பேட்டை மீன் மார்கெட்டில் விற்பனை கலைகட்ட தொடங்கியது, மீன்களின் விலையும் 100 ரூபாய் முதல் அதிகபட்சமக 2000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது வியாபாரம் எதிர்ப்பாத்த அளவில் இல்லை எனவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாரம் முழுவதிலும் இல்லாத விற்பனை ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் தான் விற்பனை ஆவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதிலும் கொரனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சந்தைக்கு வருபவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறிய போலிசார், சோதனையிலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com