தமிழகத்தில் 97 % நகை கடன் தள்ளுபடி செய்யப்ப்பட்டுள்ளது

தமிழகத்தில் 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் அளவில் 97 சதவீதம் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 97 % நகை கடன் தள்ளுபடி செய்யப்ப்பட்டுள்ளது

தமிழகத்தில் 5 சவரனுக்குட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து போலி நகைகள் வைத்து மற்றும் முறைகேடாக நகைக்கடன் பெற்றது போன்றவை அடையாளம் காணப்படுகிறது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கு சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு 5296 கோடி அளவிற்கு 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது, தகுதி வாய்ந்த 97 சதவீதம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பயனாளிகளுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பயிர்க் கடன் அடிப்படையில் பத்தாயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் பெரியசாமி கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com