தான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்....

டிரெண்டிங் ஆக்க வேண்டும் என்பதற்காக நடிகை சித்ரா மரணம் வழக்கு தொடர்பாக காவல்துறையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என முன்னாள் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்....

அ.தி.மு.க அரசின் அனைத்து நல்ல திட்டங்களையும் படிப்படியாக குறைத்து நிறுத்துவதே திராவிட மாடலின் நோக்கமென முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்த நிலையில், பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை இருப்பதாகவும், நிபந்தனையில் சற்று தளர்வு வழங்குமாறும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனடிப்படையில் மாதம் இருமுறை ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் தளர்வு வழங்கியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தி.மு.க-வின் காழ்ப்புணர்ச்சி தொடர்வதால் இன்றும் தான் கையெழுத்திட வந்துள்ளதாக தெரிவித்தார்.

சின்னதிரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டுமே தவிற தன்னிடம் கேட்கக்கூடாது எனவும் தான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

. மேலும், அ.தி.மு.க ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்ததாகவும், தற்போது தி.மு.க ஆட்சியில் 17வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், அ.தி.மு.க பொற்கால ஆட்சியாகவும், தி.மு.க கற்கால ஆட்சியாகவும் இருந்து வருவதாகவும், இங்கு பேருந்து நடத்துனர், காவல்துறையினர், பொதுமக்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் விலைவாசி உயர்வால் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் மக்கள் அ.தி.மு.க அரசு ஹீரோவாக செயல்பட்டதையும், தி.மு.க அரசு ஜீரோவாக செயல்பட்டு வருவதையும் புரிந்துகொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் மனநிலையின் பிரதிபலிப்பை காட்டுவார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க இணைப்பு என்பது எடுபடாத விஷயம் என்ற அவர், இனி அதற்கு வாய்ப்பே இல்லை எனவும், இணைப்பு குறித்து சசிகலா கூறும் கருத்து கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com