சென்னை ஓவிய கண்காட்சி... அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டு தொடங்கி வைப்பு!!

ஓவியக் கண்காட்சி
ஓவியக் கண்காட்சி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ லியோனி ஆகியோர் கலந்துக் கொண்டு தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்துக்கொண்ட இந்த ஓவியப்போட்டியில் 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது. நடிகர் சிவக்குமார் எழுதிய திருக்குறள்-50 என்ற நூலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com