சுட்டெரிக்கும் வெயிலால் அவதியா? ஏசி வாங்க முடியவில்லையா? கவலை வேண்டாம் !!

சுட்டெரிக்கும் வெயிலால் அவதியா? ஏசி வாங்க முடியவில்லையா? கவலை வேண்டாம் !!

கோடை காலம் தொடங்கிவிட்டால் பலருக்கும் எரிச்சல் தான் வரும், ஏனெனில் வெப்பத்தின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்கும். கோடைகாலத்திற்கும் மட்டும் ஏசிகளை நமது பட்ஜெட்டிற்கு தகுந்த விலையில் வாடகைக்கு வாங்கி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் தானே? சில முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலையில் ஏசிகளை வாடகைக்கு தருகின்றன. இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்வோமா?

இவ்வாறு ஏசிகளை வாங்குவதெற்கென்றே பல ஆப்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் உள்ளன. அதில் பலவீதமான விலைகளில் ஏசிகள் உள்ளன. ஏசிகளை உலகம் முழுவதும் செயல்படும் எவ்வித ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறை மற்றும் கொள்கைகளை பயன்படுத்தமாட்டார்கள். தற்போது சில நிறுவனங்களை பற்றி இங்கே காண்போம்.

ரென்டோ மோஜோ :

மரச்சாமான்கள் முதல்வீட்டிற்கு தேவையான பல பொருட்களை ரென்டோமோஜோ வாடகைக்கு வழங்குகிறது.இது பெரிய நகரங்களானமும்பை, டெல்லி, நொய்டா, குர்கான், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற இடங்களில் செயல்பட்டுவருகிறது.

இது ஆப்ஸ் வடிவிலும் மற்றும் வெப்சைட் வடிவிலும் மக்கள் அணுகுவதற்கு கிடைக்கிறது. ரென்டோமோஜோவில் வாடகைக்கு கிடைக்கும் ஏசி 1 டன்னுக்கு மாதம் ரூ.1219ல் தொடங்கி, 2 ஸ்டார் 1.5 டன் மெஷினுக்கு மாதம் ரூ.2469 வரை செல்கிறது.

இந்த வாடகையிலேயே இலவச இடமாற்றம், மேம்படுத்தல்கள், பொருத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்குகிறது. மேலும் நீங்கள் எவ்வளவு காலங்கள் ஏசியை வாடகைக்கு எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து வாடகையின் விலையளவு நிர்ணயம் செய்யப்படும்.

சிட்டி ஃபர்னிஷ் :

மரச்சாமான்கள், வீட்டு உபயோகபொருட்கள் என அனைத்தையும் வாடகைக்கு வழங்குவதில் இது ஒரு டெல்லி, நொய்டா, குர்கான், ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு உட்பட பெரும்பாலான பெரியநகரங்களிலும் இதன்சேவை செயல்படுகிறது.

பல டிமாண்டுகள் காரணமாக தற்போது இதில் ஒரு விண்டோ ஏசி மாடல் தான் உள்ளது, இந்த 1.5 டன் திறன் கொண்ட ஒரு விண்டோ ஏசி மாடலின் வாடகை மாதத்திற்கு ரூ.1569 ஆகும். இதில் நீங்கள் முதலில் ஒரு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இருப்பினும் இது ஏசியை பொருத்துவதற்கு கூடுதலாக பணம் வசூலிக்கிறது.

ஃபேர் ரென்ட் :

ஏசிகளுக்கு ஏராளமான ஆப்ஷன்களை ஃபேர் ரென்ட் வழங்குகிறது. விண்டோ ஏசி, ஸ்பிளிட் ஏசி என பலவித ஏசிகளை இதில் நாம் பார்க்கமுடியும். இதில் 0.75 டன் விண்டோ ஏசிக்கு மாத வாடகை ரூ.915 ஆகவும், 1 டன் ஸ்பிளிட் ஏசிக்கு மாத வாடகை ரூ.1375 ஆகவும் உள்ளது.

இதோடு கொடுத்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் இலவசமாக ஸ்டபிலைஸர் கிடைக்கிறது, மேலும் இந்த வாடகையிலேயே இலவச இடமாற்றம், மேம்படுத்தல்கள், பொருத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்குகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com