ஜியோவின் பிளான் – ஆண்டுக்கு ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் போதும்

ஜியோவின் பிளான் – ஆண்டுக்கு ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் போதும்

சில ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் நம்பர் ஒன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த சாதனைக்கு காரணம் ஜியோவின் மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களே. ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் உங்களுக்கு குறைந்த விலையில் அதிக வேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் ஒரு வருடம் செல்லுபடியாகும் டேட்டா திட்டங்கள். இந்த திட்டங்களை ஜியோ டெலிகாம் நிறுவனம் 'வொர்க் ஃப்ரம் ஹோம் டேட்டா பேக்குகள்' என்ற பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள திட்டங்களில் சில மாறுதல்களுடன் இந்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

முதலாவதாக, ஹோம் டேட்டா திட்டத்தின் விலை ரூ.2,878. இந்த திட்டம், உங்களுக்கு ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இந்த திட்டத்தில் உங்களுக்கு மொத்தம் 730 ஜிபி இணையம் வழங்கப்படும். டேட்டா முடிவடைந்துவிட்டால் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். இது டேட்டா திட்டம் என்பதால், அழைப்பு, SMS அல்லது OTT நன்மைகள் கிடையாது.

ஜியோ சமீபத்தில் அறிமுகப்படுத்திய மற்றொரு திட்டமும் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் செல்லுபடியாகும். இதில், உங்களுக்கு தினசரி 2.5 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது, அதன் பிறகு இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவின் படி, இந்த திட்டத்தில் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.2,878 திட்டத்தைப் போலவே, இதில் டேட்டாவைத் தவிர வேறு எந்த நன்மைகளும் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் விலை ரூ.2,998.

ஜியோவின் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' பிரிவில் மேலும் மூன்று திட்டங்கள் உள்ளன. இதன் விலை ரூ.181, ரூ.241 மற்றும் 301 ரூபாய் திட்டங்களாகும். அனைத்து திட்டங்களும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன. ரூ.181 திட்டத்தில், 30ஜிபி டேட்டாவும், ரூ.241 திட்டத்தில் 40ஜிபி டேட்டாவும், ரூ.301 திட்டத்தில் 50 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com