ஆன்மிகம்
இன்று ஈஸ்டர் தினம் கொண்டாட்டம்
சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கருதப்படும் ஈஸ்டர் தினம் இன்று நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாடு முழுக்க உள்ள தேவாலயங்களில் இரவு நேர வழிபாட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
புனித வெள்ளி தினம் இயேசு கிறிஸ்து மரிக்கும் நாளாகவும், ஈஸ்டர் தினம் அவர் உயிர்த்தெழும் நாளாகவும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவர்களுக்கு இது மிகவும் முக்கியமான நாளாகும்.
இந்நிலையில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த வழிப்பாட்டில் ஆயிரக்கணக்கான கிருஸ்துவர்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுப்பட்டனர்.