சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பதிருவிழா... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பதிருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்

. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாணுமாலய சுவாமி கோவிலில் இருந்து தெப்பக்குளத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பகுளத்தில் மேளதாளம் முழங்க 3 சுற்றுகள் வலம் வந்தார். கோரோனா தடை உத்தரவு காரணமாக நடைபெறமால் இருந்த தெப்ப உற்சவம் இந்த ஆண்டு நடந்ததால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com