சென்னையில் நாளை ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்… விழா ஏற்பாடுகள் தீவிரம்… பாதுகாப்பு பணியில் 3000 போலீஸார்!!

சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை நடைபெற உள்ள ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நாளை ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்… விழா ஏற்பாடுகள் தீவிரம்… பாதுகாப்பு பணியில் 3000 போலீஸார்!!

சென்னை தீவுத்திடலில் நாளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை தி.நகர் உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர் , கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் சென்னையில் மிக விமர்சையாக நடைபெறுகிறது.

நாளை மாலை 5 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். மேலும் இந்த விழாவில் 3,000 போலீசார் பாதுகாப்பில் பணியில் ஈடுபடுவார்கள். 15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10ஆம்புலன்ஸ் மற்றும் 2 மருத்துவமனைகளின் 2 மருத்துவ குழுக்கள் பொது மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்வார்கள்.

விழாவிற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் திருப்பதி பிரசாதம் வழங்கப்படும். இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு மற்றும் பல்வேறு அமைச்சர்கள் வருகை தருகிறார்கள். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சீனிவாச திருக்கல்யாணத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெறும் திருக்கல்யாணத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com