மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா...

மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்
வேப்பிலை மாரியம்மன்
வேப்பிலை மாரியம்மன்

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் தடைபட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியுள்ளது.

பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் உருவம் தாங்கிய ரதங்களின் அணிவகுப்பு அனைவரையும் ஈர்த்தது. இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பூச்சொரிதழ் விழாவினைத் தொடர்ந்து வருகிற மே 1ம் தேதி, காப்புகட்டுதல் விழாவும், முக்கிய விழாக்கலான் பால்குட விழா மே 15ம் தேதியும், வேடபரி விழா 16 ம்தேதிம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com