கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழா

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழா

கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சிக்காக 63 நாயன்மார்களின் சிலைகள் கோவிலின் பீடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவிலில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனையானது நடைபெற்று வருகிறது.

நாயன்மார்கள் பல்லக்குக்கு முன்பாக மயிலாப்பூர் காவல் தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர் மற்றும் முண்டககண்ணியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைவது முக்கிய சிறப்பம்சம் ஆகும். இந்த அறுபத்தி மூவர் வீதியுலாவும் பொருத்தவரை பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவதால் பல்வேறு இடங்களில் இருந்தும் சிவனடியார்களும் சிவ பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் பக்தர்களின் கூட்டத்தைப் பொருத்து 4 மாட வீதிகளிலும் ஊர்க்காவல் படையினர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com