சூரியனார்கோயில் ஆதீனம்
சூரியனார்கோயில் ஆதீனம்

பட்டின பிரவேசத்துக்கான தடை நீக்கம்... தமிழக அரசுக்கு சூரியனார்கோயில் ஆதீனம் நன்றி!!

பட்டின பிரவேசத்துக்கு தடையை விலக்கிய தமிழக அரசுக்கு சூரியனார்கோயில் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்திற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருந்தார்கள். அதன்பிறகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது.

18 சைவ ஆதீனங்கள் சார்பில் குன்றக்குடி ஆதீனம் பேரூர் ஆதீனம் தருமை ஆதீன கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்த சுவாமிகள் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து தடையை விலக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் பட்டினப்பிரவேசத் திற்கான தடையை விலக்கி உத்தரவிட்ட தமிழக அரசுக்கு சூரியனார்கோயில் ஆதீனம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

logo
vnews27
www.vnews27.com